Sunday 1 March 2015

YENGA VAKIL SAAR - A Tamil Play



YENGA VAKIL SAAR




எங்க வக்கீல் சார்

Scene 1
திருவல்லிகேணியில் ஒரு குப்பையான வக்கில் ஆபீஸ். ராமசாமி  அய்யங்கார் ஒரு மேஜையின் பின்னல் அமர்நதிருகிறார். வேலாயுதம்  உள்ளே நுழைகிறார்.
வே.    வணக்கம் அய்யா.
ரா. யாரு,... ஓஹோ, நீயா, வா, வா வா. உட்காரு. அப்ப என்ன விஷயம்?
வே . ஒண்ணும் இல்லே ஸார், வெரும  பாத்துட்டு போலான்னு வந்தேன்.
ரா . சந்தோஷம் . எல்லோரும் சௌக்கியம் தானே ?
வே . ஆமா, ஆனா
ரா. ஆனா என்ன?
வே . ஒன்னும் இல்லே ஸார். அதான் என் அண்ணன் ஒரு சிக்கல்லே  மாட்டிகிட்டு இருக்கான் ........அதான் உங்க கிட்ட...
ரா.சொல்லுப்பா சொல்லு

வே . அவன்  traffic dutyலே இருக்கான் ஸார். ஒரு பெரிய Benz வண்டிலே ஒரு பணக்கார திமிரு பிடிச்ச பய red light care பண்ணாம ஹார்ன் அடிச்சுகினு பாஸ் பண்ணிருகான். எங்க அண்ணன் அந்த பயலை நிறுத்தி fine பண்ணிருகான். அந்த ஆளு குடிச்சுட்டு தாறுமாறா பேசிருகான். எங்க அண்ணன் ஒரு கோவகாரன், யாராவது  misbehave பண்ணா பொறுத்துக்க மாட்டான், அதான்  கொடுத்தான் ரெண்டு, தவடைலே.
ரா . கொடுக்கவேண்டியது தானே. இந்த பயகளுக்கு பண கொழுப்பு. இல்லேன எப்படி திருந்துவானுங்க 
வே. கரெக்டு ஸார், ஆனா  அதுக்குள்ள ஒரு கூட்டம் சேர்ந்துபோச்சு. எல்லாம் இந்த வேலையில்லா  human rights ஆளுங்க தான், அதுக்குன்னே திரிஞ்சுகின்னு இருக்கானுங்க
ரா . எல்லாம் ராவுடி  பசங்க .வெள்ளக்காரன் காலமா இருந்தா, இவங்க பாண்டை அவுத்து சவுக்கலேயே அடிச்சு அனுப்பி இருப்பாங்க.
வே. அவங்க வீடியோல்லாம் எடுதிருகாங்க ஸார்.அதை வச்சு ரகளை பண்ணிருக் காங்க. எங்க அண்ணன் அவங்கள அடிக்கபோய், பெரிய ரசாபாசம் ஆயிபோச்சு.
 ரா. அவ்வளவு தானே. இது தினம் நடக்கறது தானே?

வே. ஆனா, அந்த பணக்கார பய, பெரிய ஆளு சார். அண்ணனை suspend பண்ணிவிடுவேன்னு சொல்லிருக்கான். எங்களுக்கு ஒரே கவலையா இருக்கு சார்.
ரா. ஆஹா, அதெல்லாம் ஒண்ணும் பண்ண முடியாது.

வே. அவன்கிட்டே வீடியோ இருக்கு சார். மினிஸ்டர் எல்லாம் தெரியுமாம். அண்ணன் கம்ப்லைன்ட் பண்ணிருக்கான். ஆனா சப்-இன்ஸ்பெக்டர் ஒண்ணும் பண்ணமுடியாது, இது பெரிய இடத்து  சமாசாரம்னு சொல்லி யிருக்காரு .suspend ஆயிட் டா என்ன சார் பண்றது.
ரா. இரு, கொஞ்சம் யோசனை பண்ணலாம் . அவன் எவ்வளவு பெரிய ஆளாவேனா  இருக்கட்டுமே! போலீஸ் , போலீஸ்  தானே! அந்த போக்கிரி   பயலை சிக்கல்லே மாட்டணும்..... யோசிப்போம்.
வே.  சண்டையிலே எங்க அண்ணன் அவங்க லாப்டாப்பை ஒடச்சுட்டான் சார்
ரா . எல்லாம் அந்த humanright ஆளுங்க பண்ணினது தாண்னு சொல்ல வேண்டியது  தானே !
வே. அவுங்கயெல்லாம்  அந்த போக்கிரி யோட சேர்ந்துகினு இருக்கானுங்க. அந்த ஒடஞ்ச லாப்டாப்பை போலீஸ் station லே எவிடேன்ஸா  குடுத்திருக்கானுங்க சார்.
ரா. அந்த லாப்டாப் இப்போ போலீஸ் station லே தானே இருக்கு?

வே. ஆமாம் சார்.
ரா. சப்-இன்ஸ்பெக்டர் கிட்டேயா?

வே. ஆமாம் சார்

ரா . இதோபாரு அந்த லாப்டாப்லே கச்சான் புச்சானு எங்கேங்கேது வந்த மிலிடண்ட் ISI மெசேஜ் எல்லாம் போட்டு அந்த ஆளு பேரை கொடுத்துடு. அவன் ஒரு anti national ஆசாமி , ஒரு honest head   அட்டாக் பண்ணி இருக்கான்னு சொல்லிடலாம் .
வே. Best idea சார். ஒங்க கிட்ட வந்தா எதாவது வழி கண்டுபிடிப்பிங்கேன்னு  எனக்கு தெரியும் சார்.
ரா. இது ஒண்ணும் பெரிய விஷயமில்லை. நான் பழம் தின்னு  கொட்டை போட்டவன். ஒருத்தரும் என்கிட்டே வாலாட்ட முடியாது.
வே. அதான் எனக்கு தெரியுமே சார் .
ரா. அது சரி , உன் அண்ணன் எனக்கு என்ன பீஸ் தருவான்?
வே. ம்ம் ..பீசா  சார் , எங்க கிட்ட என்ன சார்  இருக்கு! எல்லாமே கைவிட்டுபோச்சே, கடன்காரனாலதானே  எங்க ஜீவனமே நடக்குது.
ரா. இத இத இது தான் வேணாங்கறது. நானும் ஜீவிக்கனமோல்யோ, எவனும்  பீஸ் தரமாட்டேன்னா நாமட்டும் என்ன பண்ணறது? அந்த ராமச்சந்திர ஐயரை பாரு, நாலு மாடி வீடு  கட்டி இருக்கான். எல்லோரும் அவன் கிட்டேதான் ஒடரானுங்க. என் ஒரே பொண்ணு, பாவம், வேலைக்கு போய் சம்பாதிச்சு குடும்பத்தை நடத்தறா. என் கதி இப்படி இருக்கு.
வே. சார், ஒரு ஐடியா...
ரா. என்ன சொல்லு.
வே. எங்க ஸ்டேஷேன் கீழே ஒரு ஒயின் ஷாப் வரபோவுது சார்.
ரா. அப்பாநான் வக்கீல் , ஒயின் ஷாபெல்லாம் எனக்கு எதுக்கு ?
வே. நீங்க வேணாம் சார், ஒங்க ஷட்டகருக்கு பொருத்தமா இருக்கும் சார்.
ரா. அது கரெக்ட்தான். ஆனா, அவன் சுத்த முட்டாள்குடிகார பய, அவனால இதெல்லாம் சமாளிக்க முடியாது.
வே. வெறும் பேருக்கு தாங்க, எல்லாம் station லே பாத்துக்கு வாங்க. நெறய வரும்படி வரும் சார்.
ரா. சரி , அப்போ தை முடிச்சுவை. இதுலே எனக்கு முப்பதாயிரம் ருபாய் வரணும். என்ன சொல்லரே ?
வே. அய்யய்யோ ! ரொம்ப ஜாஸ்தி சார்! ஒரு பத்தாயிரத்துக்கு வேணா பேசறேன்.
ரா. சரி ,தொலை. எப்போ ஆரம்பிப்பாங்க ?
வே. பண்ணிடறோம் சார். அண்ணனும் சப்-இன்ஸ்பெக்டரும் சேர்ந்தே பண்ணிடு வாங்க சார்
ரா. அப்போ சரி, தைரியமா போ. இன்னக்கி ராத்திரி எல்லாத்தையும்  விவரமா ஏழுதி கொடுக்கிறேன் . அந்த லாப்டாப்குள்ளே என்ன வைக்கணும் , என்ன சொல்லணம், எப்படி புரடா கலப்படம் பண்ணனும்னு எல்லாம் சொல்லறேன். நம்மளுக்கு சாதகமாயிடும் பார்த்திண்டே இரு . அவனே ஓடிவந்து பணத்தை கொடுப்பான், மினிமம் ஒரு லட்ச்சமாவது அடிச்சுடலாம். அதிலேயும் எனக்கு பங்கு கொடுக்கணும்.
(lights dim out )







Scene 2
அதே ஆபீஸ். இரண்டு வாரத்துக்கு பிறகு  , ஒரு சாயங்காலவேளை. ராமசாமி ஐய்யங்கார், தன் ஆபீசில்  அமர்ந்திருக்கிறார்.
ரா. ஒரு பயலும் இங்கே வரதில்லை. எல்லாரும் ராமச்சந்திரன், ராமச்சந்த்ரன்னு ஓடுறாங்க, நேத்து பிறந்த பையன், அவனுக்கு என்ன தெரியும் !!!!? -​ ​ - - - - - - - - ராமச்சந்திரா போடா.. போ. எனக்கும் காலம் வரும் ஒன்ன அப்ப கவனிசுச் கறேன்
 
(உள் பக்கம் திரும்பி ) ஏண்டி செவிடே ! அப்போலேந்து ஒரு டம்பளர் காப்பி கேக்கிறேன் அது கூட கிடையாதா
(அவர் பெண் சாந்தா கதவை தள்ளி கொண்டு ஒரு காப்பி டம்பளருடன் நுழைகிறாள்)
சா. அப்பா , இந்தா காப்பி, நானே உனக்கு சூடா போட்டு எடுத்துண்டு வந்தேன்.
ரா. கண்ணு நீ தான் எனக்கு பண்ணுவே . ஜம்முனு போட்டிருக்கேயே! என்ன இவ்வளவு சீக்கிம் வந்துட்டே! லீவு வுட்டுட்டாளா?
. இல்லேப்பா , நான் வேலைய விட்டுட்டேன்.
ரா. என்ன சொல்லறே ? வேலைய விட்டுடையா? அம்மா சாந்தா, ஒன் சம்பள த்திலே தான் நம்ப குடும்பமே ஓடுது  , அந்த படுபாவி ராமச்சந்திரன் என்ன கொல்லாம கொல்லரானே , நம்மள தெருவிலே நடக்க விடாம பண்ணிட்டுதான் மறுவேலை பார்பான் போல இருக்கு ! அந்த ராஸ்கல் என் குடியை கெடுக்கவே வந்திருக்கான், நாசமாபோக .
சா. அப்பா, சிரிங்கப்பா, நான் ஒரு நல்ல சமாச்சாரம் சொல்ல வந்திருக்கேன் .
ரா. என்னத்தை சிரிக்கறது, நீ வேலையை விட்டுட்டே, நான் என்ன செய்யபோறேனோ!? அந்த போலீஸ்காரான் ஏதோ வழி சொல்லி இருக்கான், ஆனா அது கொஞ்சம் நாள் ஆகும்! அது வரைக்கும் என்ன பண்ணறது?
சா. அப்பா, நீ கவலை படாதே, எல்லாம் சரியாதான் நடக்குது. நா ...ன், வேலை பண்ணற கம்பெனி, சக்கரவர்த்தி அய்யங்கார் அண்ட் சான்ஸ் கம்பெனி .....அதிலே ......, அப்பா ......... கேக்கமாட்டியா .....
ரா. என்னம்மா !? என்ன நடந்தது ? சொல்லி தொலை
சா. ஒன்னும்மில்லை அப்பா, அவர் பிள்ளை .....கிரண் ...வந்து......., வந்து.......
ரா. என்ன பண்ணாண் ஒன்னை ? அப்பவே எனக்கு தெரியும், இந்த பணக்கார பசங்க நமக்கு சேராதுன்னு. ஒங்கிட்டே சொல்லி சொல்லி தானே அனுப்பிச்சேன்! என்ன பண்ணான் சொல்லு, அவன சும்மவிடமாட்டேன் , கேசு போடறேன். என்ன நெனைச்சுண்டு  இருக்காங்க? நான் ராமசாமி அய்யங்கார் அட்வகேட்டா, கொக்கா , இப்பவே போலீஸ கூப்பிடறேன்.
சா. ஐயோ , அப்பா, கொஞ்சம் பேசாம இருப்பா. அவர் காதிலே விழபோறது.
ரா. அவரா? எவரு? எவண்டி அவன்?
சா. ஐயோ அப்பா, கிரண் இங்கே வந்திருக்கான், என்னை அவன் லவ் பண்ணறான். கல்யாணம் பண்ணிக்க போறான்ப்பா. சக்கரவர்த்தி சார் கூட ஒத்துண்டுட்டார். கிரண் உன் சம்மதம் கேட்க வந்திருக்கான்.
ரா. கிரணா .....? யாரு ......இங்கேயா.........கல்யாணமா .........என்ன சொல்லரே ஒண்ணுமே புரியலே
சா  அப்பா, நீ உட்காரு நான் விவரமா சொல்லறேன் . கிரனை நான் கல்யாணம் பண்ணிக்க போறேன். கிரணை கூப்பிடறேன், இங்கேதான் லிவ்விங் ரூமிலே உட்கார்ந்திருக்கான். கிரண் ........கிரண்!  pleaase come to my father's office.
கிரண் தயங்கிய படி உள்ளே நுழைகிறான்
ரா. வாங்கோ ... வாங்கோ ..., இவ என்னமோ  சொல்லறா  எனக்கு ஒண்ணுமே புரியலே!?
கி. சார் , சாந்தாவும் நானும் ஒருத்தரை ஒருத்தர் லவ் பண்ணறோம். ஒங்களோட ஆசீர்வாதத்தோட கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படறோம். ஒங்க மிசசையும் ஒத்துக்க வைக்கணும் .
ரா. அவளுக்கென்ன தாராளமா ஆசீர்வாதம் பண்ணுவா.ஒங்கள மாதிரி மாப்பிள்ளை கெடைக்க நாங்க ரொம்ப கொடுத்து வச்சிருக்கணும்.

கி. அப்படி இல்லை மாமா. சாந்தா ஒரு ஜெம், எங்க அப்பா, அம்மாவுக்கு அவள ரொம்ப பிடிச்சிகுக்கு. அவாளுக்கு  ரொம்ப சந்தோஷம்.

ரா. எனக்கும் ரொம்ப சந்தோஷமப்பா.
 சா.எங்களை  ஆசீர்வாதம் பண்ணுப்பா.


ரா. ஆமா , ஆமா. தீர்காயுஷ்மான் பவா, செளபாக்யவதி பவ! மாப்பிள்ளை ...., ஒங்களை இனிமே மாப்பிளைன்னு தான் கூப்பிடபோறேன். எம்பொண்ணு சாந்தா எனக்கு "Apple of the eye" இவளை நன்னா வச்சுகோங்கோ. இவ கஷ்டப்பட்டா இந்த கிழதுக்கு உயிரு போயிடும் .
கி. மாமா, இவ எனக்கும்  "Apple of the eye" தான். இவ  சந்தோஷமா இல்லேன்னா நான் உயிரவிட்டுடுவேன்.
ரா. சே சே, இது என்ன அபசகுனமான பேச்சு, நீங்க நீடூழி வாழனும், ஒங்க குடும்பம்  பல்லாண்டு பல்லாண்டு ராஜா யோகதோட இருக்கணும் .
சா. அப்பா , நீங்க பேசிண்டே இருங்கோ,நான் போய் அம்மாவுக்கு எல்லா விவரமும் சொல்லறேன்.அவளும் எங்களை வாழ்த்தணம்
ரா. கட்டாயம் வாழ்த்துவாடி, நீபோய் அவளுக்கு எல்லா விவரத்தையும் சொல்லு.
சாந்தா  உள்ளே ஓடுகிறாள்.
கி. மாமா, எங்க கம்பெனிலே ஒரு தீர்மானம் பண்ணி இருக்கோம், நீங்க ஒத்துண்டால் .......
ரா. என்ன தீர்மானம்  ?
கி. மாமா, we would be honoured to have you as legal advisor for our company. நீங்க ஒரு  ஜெனெரல் அட்வைஸ் குடுத்தா போரும், ஒரு லட்ஷம் ஹானரோரியம் கொடுக்க board approve பண்ணியிருக்ககு . போக  போக இன்னும் ஏத்தி கொடுத்தாலும்   கொடுக்கலாம். நீங்க இதுக்கு ஒத்துப்பேங்கோன்னு நம்பறேன் .
ரா. மாப்பிள்ளை, நீங்க என்னசொன்னாலும் நான் ஒத்துப்பேன். இதுகூட நான் பண்ணலேன்னா, எப்படி !
கி. அப்படின்னா !
ரா. Done sir, done. agreed. அப்புறம் சொல்லுங்கோ
கி. ஒரு சின்ன விஷயம் மாமா. இது கம்பெனி பத்தியில்லே வேற ஒரு விஷயத்துக்கு உங்க அட்வைஸ் கேட்டுண்டு போலாம்ன்னு...... .

ரா. என்னப்பா ? என்ன விஷயம்? தயங்காம கேளு.
கி. இல்லே மாமா, நா இப்ப ஒரு தகராரிலே மாட் டிண்டுயிருக்கேன்.
ரா. இதோ பாரு, boys will be boys. after all young blood. ஏதாவது பொண்ணு தகராறு பண்ணராளா ? என்கிட்டே விடுங்கோ, அவளை காலிலே வந்து விழவைகிறேன்.
கி. அப்படியெல்லாம்  ஒன்னுமில்லை மாமா. ஒரு traffic accident மாமா.
ரா . பூஹ்ஹ். ஒங்களை இனிமே யாரு touch பண்ண முடியும். I will fix it. போலீஸ்லே எல்லாரையும் எனக்கு தெரியும்.
கி. போலீஸ்காரனே என்னை அசால்ட் பண்ணினான் மாமா. ஒரு red light லே overshoot பண்ணினேன். அதுக்கு என் லாப்டாப்பை ஓடசுட்டான் அந்த ராஸ்கல். ஒரு கும்பல் கூடிபோச்சு. ஆனா அவுங்கெல்லாம் என் பக்கம் தான். வீடியோ கூட எடுத்திருக்கோம்.போலீஸ்காரங்கெல்லாம் உள்கை. என் லாப்டாபிலே என்னென்னமோ அசிங்கமா எழுதி, நான் ஒரு பெரிய ரவுடின்னு வதந்தி கிளப்பி இருக்காங்க. இது வெளியே வந்தா என் IPO damage ஆகும் மாமா. உங்க அட்வைஸ் எனக்கு வேணும் மாமா .
ரா. மாப்பிளை, எல்லா போலீஸ்காரங்களும் அயோக்ய, பசங்கஇது நம்ம reputation பத்தின விஷயம், இல்லையா? நான்போய் பேசி எவ்வளவு மால் வெட்டனும்னு தெரிஞ்சுண்டு, எவ்வளவு  பணம் கொறைக்க முடியுமோ அவ்வளவு கொறைச்சுடறேன். அந்த பயலுக  வாயை மூடணும்...... ம் ம் ம் ....கொஞ்சம் டைம் கொடுங்க எல்லாத்தையும் சரி பண்ணிடறேன்.
சா. ( off stage )   அம்மா பூஜை உள்ளுக்கு கூப்பிடறா, கிரண் வாங்கோ, வாங்கோ!
ரா. கிரண், நீ போ, நான் இதோ வரேன்.
கிரண் goes out
ரா.பைசா கொடுத்தா இந்த போலீஸ் கரங்களுக்கு போதாததே ........ம் ம் .....
எப்படி சமாளிக்கறது? .......கடவுளே ! எனக்குமட்டும் ஏன் இப்படி கஷ்டம் கொடுக்குறே? அந்த திமிரு பிடிச்ச ராமசந்தரனுக்கு   மட்டும் ஒரு கஷ்டமும் கொடுக்காதே.

















Scene 3
Late in the evening, two weeks later.
A heavy ornate living room in the Home minister's house.Ramasamy Iyyengar is sitting with the minister and sipping coffee
மி. ராமசாமி ரொம்ப சரியான நேரத்திலே வந்திருக்கேபா. இப்போ போலீசோட image ரொம்ப மோசமாயிருக்கு, அதுக்கு ஏதாவது பண்ணனும், ஆனா என்ன பண்ணறதூனு தான் தெரியலே.
ரா. அவ்வளவு தானே சார், நீங்க கூபிட்டனுபியதும் என்னமோன்னு ரொம்ப யோசனை பண்ணேன். ஒங்க problem சால்வ் செய்ய என்கிட்டே ஒரு வழி  இருக்கு.
மி. அப்படியா! ரொம்ப சந்தோஷம், சொல்லுப்பா என்ன வழி அது !?
ரா. நீங்க ஒரு dynamic ஆளு தானே, change எல்லாம் கொண்டுவரப்போறேன்னு ஒரு announcement கொடுங்கோ .
மி. நான் dynamic ஆளு தான், அது correct. ஆனா என்ன பண்ணறது?
ரா. போலீஸ் force குள்ள ஒரு புதூ ஏற்பாடு பண்ணப்போறேனு சொல்லு ங்கோ சார்
மி. அது சரி. அது எப்படி, என்ன புதுமைன்னு தெரியலையே.
ரா. மினிஸ்டர் சார், இந்த பீபில் - போலீஸ் friendship லே ஒரு  prograss காமிக்கலாம்னு சொல்லறேன். officer எல்லாம் வேண்டாம். traffic போலீஸ் லேந்து, மக்கள் கஷ்டம் தெரிஞ்ச ஒரு head constable லை இன்ஸ்பெக்டரா ப்ரமோட் பண்ணி commission லே போடுங்கோ.
மி. எடுத்தவுடனே இன்ஸ்பெக்டரா? அது கஷ்டம், பண்ணமுடியாதே.......

ரா. ஏன் முடியாதுநம்ப reputation is at the lowest, ஒரு மாத்தம் ரொம்ப அவசியம், ஒரு head கான்ஸ்டேபுளுக்கு  அப்படி ஒரு promotion தந்தா, போலீஸ் force மொத்தமா உங்களுக்கு loyal லா ஆயிடும்னு DGP கிட்டே சொல்லுங்கோ. DGP உங்களை appreciate பண்ணுவாரு . சாத்மீகமான Head கான்ச்டபுள்  , மனுஷன் கஷ்டம் தெரிஞ்சு, media friendly யான ஆசாமியா இருப்பான் சார். புது வே லையானதாலே மும்மரமா எல்லோரோடையும் நன்னா பேசி நல்ல impression கொடுப்பான் சார். போலீஸ் force க்கும்  நல்ல impression create பண்ணுவான் சார்.
மி. idea நன்னா இருக்கு. ஆனா ...... சரியான  ஆசாமி கெடைகனுமே !
ரா. இருக்கான் சார். கோர்ட்டுக்கு  போரவழியிலே நான் தினமும் பாக்கறேன் சார். Even tempered under the worst of traffic jams. ரொம்ப நல்லஆள்  சார்.
மி. நாளைக்கு அவன இங்கே கூட்டிண்டு வாங்கோ.
ரா. கட்டாயம் கூட்டிண்டு வரேன் சார் .
மி.ராமசாமி, இதுமட்டும் success ஆனா உங்களை  ஜட்ஜா recommand பண்ணபோறேன்.
ரா. I am here to serve, even at the cost of losing a thriving practice.




மி. ஒங்க மாதிரி ஒரு ஆளு ஜட்ஜ் ஆனா, case எல்லாம் quick dispose பண்ணிடுவீங்க.
ரா. படாபட்டுன்னு கேஸ் dispose பண்ணி காமிக்கறேன் Minister சார். Mediation லே, out of court settlement பண்ணி எல்லாருக்கும் benefit இருக்காமாதிரி பண்ணி காமிக்கறேன் சார்.
மி. அது சரி, ஆனா நம்ம கட்சியை மட்டும்  மறக்காதிங்கோ.
ரா. மறப்பேனா?
They shake hands.
Lights out.
END